கடந்த 1962-ம் ஆண்டு நடை பெற்ற சீனப் போரில் இந்திய ராணுவத்தின் படுதோல்விக்கு அப்போதைய பிரதமர் நேருவின் தவறான முடிவே காரணம் என்பது உட்பட பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய ஹென்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை அரசாங்க ரகசிய ஆவணம் என்ற வகைப் பாட்டிலிருந்து விடுவித்து, பகிரங்கமாக வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் ராணுவத் தளபதியுமான அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1962-ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் படுதோல்வியைச் சந்தித்தது. இது தொடர்பாக அப்போதைய இந்திய ராணுவத்தில் 11-வது படைப் பிரிவின் கமாண்டராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஹென்டர்சன் புரூக்ஸ் என்பவர் முழுமையாக ஆய்ந்து அறிக்கை எழுதினார். பிற்காலத்தில் லெப்டி னன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பி.எஸ். பகத் என்பவருடன் இணைந்து இந்த அறிக்கையை அவர் எழுதினார்.
இந்த அறிக்கையை மத்திய அரசு, அரசாங்க ரகசிய ஆவணம் என வகைப்படுத்தியுள்ளதால், அது வெளியிடப்படவில்லை.
எனினும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் நெவில்லி மேக்ஸ்வெல் என்பவர் இந்த ஆவணத்தின் ஒரு பகுதியை தனது இணையதளத்தில் வெளியிட்டுள் ளார். அதில், அப்போதைய பிரதமர் நேரு, ராணுவ தலைமை ஆகியோரின் தவறான கணிப்பால் இந்திய ராணுவம் தோல்வியுற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹென்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
அமரீந்தர் சிங் எழுதிய, ‘முதல் உலகப் போரில் (194-18) இந்திய ராணுவத்தின் பங்களிப்பு- நேர்மையும் நம்பகத்தன்மையும்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
வெகு காலத்துக்கு முன்பே ஹென்டர்சன் புரூக்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 1965-ம் ஆண்டு இலங்கைப் போரின் போது ஆபரேஷன் பவான் குறித்த அறிக்கை வெளியிடப் பட்டது. பிறகு, 1962-ம் ஆண்டு நடந்த போர் குறித்த அறிக்கையை ஏன் வைத்திருக்க வேண்டும்.
சில அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அறிக்கையை வெளியிடாமல் இருந்தால் அது துரதிருஷ்டவசமானது. அனுபவங்களின் மூலமே ஒருவர் கற்றுக்கொள்ள முடியும். எனவே, அது வெளியிடப்பட வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்பதில் பல கட்சிகளும் கருத்தொற்றுமையுடன உள்ளன. 1962-ம் ஆண்டு போர் குறித்து நான் எழுதியுள்ளேன். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றே கருதுகிறேன். அரசியல் தரப்பிலோ அல்லது ராணுவ தரப்பிலோ யாரேனும் தவறிழைத்திருந்தால் அது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஹென்டர்சன் புரூக்ஸ் அறிக்கையை வெளியிட வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. ஆனால், ஆட்சியிலமர்ந்ததும் தனது நிலையை முற்றிலும் மாற்றிக்கொண்டது.
இதுகுறித்த கேள்விக்கு கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவைக்கு எழுத்து மூலமாக பதிலளித்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, அந்த அறிக்கையை வெளியிடுவது தேச நலனுக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்தார்.
அந்த அறிக்கையை வெளியிடாமல் ரகசிய ஆவணமாக வகைப்படுத்தும் மோடி அரசின் முடிவு தவறானது என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
“முதல் உலகப் போரில், இந்திய வீரர்கள் சுமார் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அந்த வீரர்களின் தியாகம் முறையாக அங்கீகரிக்கப்படாதது துரதிருஷ்டவசமானது. முதல் உலகப்போர் நூற்றாண்டு அனுசரிக்கப்படும் நிலையில், அந்த வீரர்களின் தியாகம் கவுரவிக்கப்பட வேண்டும்” என்றும் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago