ஆந்திரம், தெலங்கானாவில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்: மூன்று மாதத்தில் 173 பேர் பாதிப்பு, 9 பேர் மரணம்; சென்னையிலும் ஒருவர் பலியானதால் பீதி

By என்.மகேஷ் குமார்

ஆந்திரம், தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள்அச்சத்தில் உள்ளனர். இரு மாநிலங்களிலும் 173 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையிலும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதால் பீதி ஏற்பட்டுள்ளது.

ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குளிர்காலம் என்பதால் அதிகமாக பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்துமா, காச நோய் உள்ளவர்கள் விரைவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகின்றனர் என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந் துள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் பலர் அட்மிட் ஆகி வருகின்றனர். அவர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த நவம்பரில் தொடங்கி 3 மாதங்களில் மட்டும் இரு மாநிலங் களிலும் 554 பேர் இந்த நோய் அறிகுறி யுடன் ஹைதராபாத், விஜயவாடா, ஓங்கோல், குண்டூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர். அவர்களில் 173 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர்களுக்கும் பாதிப்பு

இதற்கிடையே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 5 டாக்டர்கள் மற்றும் 2 நர்ஸ்களுக்கும் இந்நோயின் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகாரிகள் ஆலோசனை

தெலங்கானா மாநிலத்தில் மட்டும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 பேர் இந்நோய் அறிகுறியுடன் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இரு மாநிலங்களிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக இரு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்து வத்துறை அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே, ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண், நேற்று மரணமடைந் தார். டாக்டர்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று கூறி அப்பெண் ணின் உறவினர்கள், மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஷெரீப் மற்றும் லலிதா ஆகிய இருவர் நேற்று மாலை உயிரிழந்தனர். இதையடுத்து, இரு மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒருவர் பலி

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டு சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே ஊழியர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சென்னை மண்ணடி கச்சாலீஸ்வரர் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (53). ரயில்வே ஊழியரான இவர், இந்த மாத தொடக்கத்தில் ஹைதராபாத் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சீனிவாசன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவரை கடந்த 15-ம் தேதி பிரபல தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோ தனை செய்து பார்த்ததில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன், நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதையடுத்து, சென்னையிலும் பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

உடல் உறுப்புகள் செயலிழப்பு

இதுதொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் விமலா கூறியதாவது:

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவிட்டு அதன்பிறகுதான் சீனிவாசன் இங்கு வந்தார். வரும்போதே, அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பன்றிக் காய்ச்சல் பாதிப்பால், அவரது உடல் உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கின. இதனால், அவர் இறந்துவிட்டார். சென்னை மாநகராட்சியிடம் தகவலை தெரிவித்துவிட்டு, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வில்லை.

சீனிவாசனின் மனைவி மற்றும் உறவி னர்களில் யாருக்கும் காய்ச்சல் இல்லை. அவர்களில் யாருக்காவது காய்ச்சல் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்யப்படும். சில வாரங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார்.

இவ்வாறு டீன் விமலா கூறினார்.

ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான மருத்துவ பரிசோதனை மையத்தில் சிகிச்சைக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்