இந்துத்வா கருத்து, மதமாற்றத்தால் பாஜக கூட்டணிக்கு பாதிப்பு: மத்திய அமைச்சர் கருத்து

இந்துத்வா கருத்துகள் மற்றும் மதமாற்ற நடவடிக்கைகள் போன்றவற்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டணியில் உள்ள லோக் தந்திரித் சமதா கட்சி தலைவரான குஷ்வாஹா கூறிய தாவது: இந்துத்வா கருத்துகள் மற்றும் மதமாற்ற நடவடிக்கை கள் போன்றவற்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனினும், நான் மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டாம் என்றே கூறி வருகிறேன். காரணம், ஏற்கெனவே உள்ள சட்டங்கள் இந்தப் பிரச்னைகளை விசாரிக்கப் போதுமானது.

இந்த விஷயங்கள் எல்லாம் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளில் இருந்து நாட்டை திசைதிருப்பும். அரசின் ஒரே குறிக்கோள் நாட்டின் வளர்ச்சிதான் என்பதை அவர்கள் (காவிக் குழுக்கள்) புரிந்துகொள்ள வேண்டும். அதை நோக்கி உழைக்க அரசையும், மோடியையும் அனுமதிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை எதிர்க் கட்சிகள் எழுப்ப இடம் தரக் கூடாது. நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் நாட்டின் வளர்ச்சி என்பதைத்தான் பிரதமரும் கூறி வருகிறார்.

இந்துத்வா கருத்துகள், மத மாற்ற நடவடிக்கைகள் போன்ற பிரச்னைகள் எழாமல் இருந்திருந் தால் காஷ்மீரில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் சில இடங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கும். ஆனால் இதே நிலை நீடித்தால், அது கட்சியையும், அரசையும் மிகக் கடுமையாக பாதிக்கும்.

விரைவில் டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது இந்த விஷயங்கள் எல்லாம் பெரும் பின்னடைவைக் கொண்டு வரும். எனவே, இப்போதிருந்தே நம்முடைய குறிக்கோளான நாட்டின் வளர்ச்சி என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.இவ் வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE