தீவிரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து மற்றொரு படகும் குஜராத் கடல் வழியாக இந்தியாவில் நுழைய முயன் றது உறுதியாகி உள்ளது. அப் படகை, கடலோரக் காவல் படை உதவியுடன் மத்திய உளவுத் துறை அமைப்புகள் போர்பந்தர் கடல்பகுதியில் தேடி வருகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்தது போல், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு பெரிய தாக்கு தலை நடத்த திட்டமிட்டு வரு கின்றனர். இதற்காக, புதுவருடத் திற்கு முந்தைய இரவில் பாகிஸ் தானின் கராச்சியில் இருந்து வெடிகுண்டுகளுடன் ஒரு படகு இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. கடலோரக் காவல் படையிடம் சிக்கிவிடும் நிலை யில், அப்படகு வெடிக்க வைக் கப்பட்டது. அதில் இருந்த தீவிரவாதிகள் தப்பி விட்டார் களா அல்லது வெடித்து சிதறி விட்டார்களா என தெளிவாக வில்லை.
எனினும், அவர்கள் பாகிஸ் தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவில் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த கடல்வழியாக ஊடுருவ முயன்றது தெரிய வந்துள்ளது. இது சம்மந்தப்பட்ட ஆதாரங்களை திரட்டும் பணியில் இறங்கியுள்ள இந்திய உளவுத்துறையினருக்கு அதனுடன் மற்றொரு படகும் இந்தியாவில் நுழைய முயன்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “வெடித்து சிதறிய படகை பின்தொடர்ந்தபடி சுமார் 240 கடல் மைல் தொலைவில் மற்றொரு படகும் இந்தியாவில் நுழைய முயன்றுள்ளது. இதன் மீதான தகவல்கள் கடலோரக் காவல் படையினரால் சற்று தாமதமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் தற்போது கடலோரக் காவல் படையினரின் உதவியால் தேடப்பட்டு வருகிறது’ என்றனர்.
குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில கடலோரக் காவல் படைகள் எச்சரிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் டெல்லி, மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago