மதமாற்றப் பிரச்சினை: பிரதமர் மோடி மீது சசி தரூர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அவர் எழுதியுள்ள இந்திய சாஸ்த்திரா என்ற புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:

தாய்மதம் திரும்புதல் போன்ற பிரச்சாரங்களால் இந்தியா வுக்கு வரவேண்டிய அந்நிய முதலீடுகளை தாங்கள் வெளியே தள்ளுவதைப் பற்றி அமைச்சர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை மோடி உணர்ந்து கொள்ள வேண்டும். சொல்லப்போனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வருவதுகுறித்து அவர்கள் கவலைகொள்ளவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை மோடி ஈர்க்காவிட்டால், அவரின் பொருளாதாரத் திட்டங்களையும், வாக்காளர்களுக்கு அவர் அளித்துள்ள உறுதிமொழிகளையும் மோடியால் நிறைவேற்ற முடியாது. அப்படி முடியாத நிலையில், காங்கிரஸ் அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கும்.

மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா பிரச்சாரத் திட்டத் தின் வெற்றியும் சந்தேகத்துக் குரியதாகவே உள்ளது.

பாஜக ஆட்சியிலமர்ந்த பிறகு, பாடப்புத்தகங்களில் தொன்மையான அறிவியல் குறித்து திருத்துவதிலும் இந்தியாவின் அடையாளம் இந்துத்துவம் என்பதை நிலைநிறுத்துவதிலும் மும்முரமாக உள்ளனர்.

இவற்றிலிருந்து மீண்டு வந்தால்தான் மோடி வரலாற்றில் இடம்பெறுவார். ஆனால், அதற்கான அறிகுறிகளை நாங்கள் பார்க்கவில்லை.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, கலாச்சாரம், ஒழுக்கநெறி உள்ளிட்ட அனைத்தையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் அணுகுகிறார். அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. வரவிருக்கும் பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறேன். அது திட்டங் களைப் பெயர்மாற்றும் பட்ஜெட்டாக இல்லாமல், திருப்புமுனையான பட்ஜெட்டாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்