ஆம் ஆத்மிக்கு பணியாற்றினால் உடனே பாஜக வேட்பாளராகலாம்: சோம்நாத் பாரதி கேலி

By ஏஎன்ஐ

முன்னாள் டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சோம்நாத் பாரதி பாஜக-வின் தேர்தல் உத்தியை கடுமையாக கேலி பேசியுள்ளார்.

அதாவது, பாஜக-வுக்கு டெல்லியில் நிறுத்த சொந்த வேட்பாளர்களே இல்லை போலும், அதனால், ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறியவர்களை கட்சிக்குள் அரவணைத்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

"பாஜக-வில் நல்ல பதவி பெற விரும்புபவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில், ஆம் ஆத்மி கட்சியில் 4 அல்லது 5 மாதங்கள் பணியாற்றுங்கள், உடனேயே பாஜக உங்களை அழைத்து வேட்பாளராக அறிவிக்கும். இந்த முறையில் முதல்வர் பதவியைக் கூட பிடித்து விடலாம்.

கிரண் பேடி, ஷாஜியா இல்மி, அஸ்வினி உபாத்யாய் ஆகியோரை அப்படித்தான் பாஜக தேர்வு செய்துள்ளது” என்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் கேலியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்