ஆந்திர மாநிலம் தெலங்கானாவில், புதிதாக உதயமாக உள்ள தெலங்கானா மாநிலத்தை முதன் முதலாக ஆளப்போகும் கட்சியை தேர்தெடுக்கும் தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தெலங்கானா மாநிலம் உருவாக போராடிய கட்சிக்கும், மாநிலம் வழங்கிய கட்சிக்கும், மாநிலம் உருவாக நாடாளுமன்றத்தில் ஆதரித்த கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதில் தெலங்கானா மக்கள் யார் பக்கம் என்பது கட்சிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் உட்பட ரங்காரெட்டி, மேதக், கரிம்நகர், நல்கொண்டா, மகபூப்நகர், கம்மம், வாரங்கல், ஆதிலா பாத், நிசாமாபாத் ஆகிய மாவட்டங்களில் உள்ள 119 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,669 வேட்பாளர்களும்; 17 மக்களவைத் தொகுதிகளில் 265 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கடந்த 58 ஆண்டுகளாக நடை பெற்ற தெலங்கானா போராட்டத் துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு நாங்கள் தான் காரணம் என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மார்தட்டி கொண்டு தனித்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது. இக்கட்சியின் தலைவர் சந்திர சேகர் ராவ், சட்டப்பேரவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டிற்கும் போட்டியிடுகிறார்.
இதே போன்று தெலுங்கு தேசம் கட்சியும், நாங்களும் மாநில போராட்டத்தில் பங்கேற்றோம், நாங்கள் மத்திய அரசுக்கு, தெலங் கானாவிற்கு ஆதரவாக கடிதம் வழங்கியதால் தான் மாநிலம் வழங்கப்பட்டுள்ளது என கூறி வாக்கு சேகரித்தனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சி, தெலங்கானா மாநிலம் வழங்கியது நாங்கள்தான், ஆதலால் மக்கள் எங்கள் பக்கம் எனக் கூறி வருகின்றனர்.
பா.ஜ.கவும் தெலங்கானாவிற்கு தொடக்கம் முதலே ஆதரவாக செயல்பட்டு வந்தது. இறுதியில் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உதவியோடுதான் தெலங்கானா மசோதா நிறைவேறியது. இதனால் பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணிக் கும் இப்பகுதில் வாய்ப்பு உள்ள தாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
எது எப்படி இருந்தாலும், மக்கள் வாக்களிக்கத் தயாராகி விட்டனர். எப்போதும் இல்லாத வகையில் இம்முறை இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இவர்களது வாக்கு முக்கியமானதாகக் கருதப்படு கிறது. இன்று நடைபெறும் தேர்தலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திர சேகர் ராவ், நடிகைகள் விஜய சாந்தி, ஜெயசுதா, மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களின் பலரது எதிர் காலம் முடிவு செய்யப்பட உள்ளது, இதன் முடிவிற்காக வரும் மே மாதம் 16-ம் தேதி வரை காத்திருக்க வேண்டியதுதான்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago