அரசியல் கட்சிகள் திரட்டிய நன்கொடையில் 90% பெரிய நிறுவனங்கள் வழங்கியவை

By செய்திப்பிரிவு

கடந்த 2013-14 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் திரட்டிய நன் கொடையில் 90 சதவீதம் பெரிய நிறுவனங்களால் வழங்கப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நன்கொடை வழங்கியதில் சுமார் 50 சதவீதத் துடன் டெல்லி முதலிடத்திலும் மகாராஷ்டிரம், குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

2013-14 நிதியாண்டில் பெறப் பட்ட நன்கொடை தொடர்பான விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. இதை அடிப்படை யாகக் கொண்டு ஜனநாயக சீர்திருத்தங்கள் கூட்டமைப்பு (ஏடிஆர்) நடத்திய ஆய்வின் விவரம் வருமாறு:

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 3 தேசிய கட்சிகளும் சராசரியாக 2012-13-ம் ஆண்டைவிட 517 சதவீதம் கூடுதல் நன்கொடை பெற்றுள்ளன. ஆனால் முக்கிய தேசிய கட்சியான பாஜக நன்கொடை கொடுத்தவர்கள் பற்றிய விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை தெரிவிக்கவில்லை.

3 தேசிய கட்சிகளும் 881 பேர் அல்லது நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.76.93 கோடியை நன் கொடையாக பெற்றுள்ளன. இதில் 2012-13-ல் ரூ.11.72 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் நன் கொடை 2013-14-ல் ரூ.59.58 கோடி யாக அதிகரித்துள்ளது (408%).

2013-14-ம் ஆண்டில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை பெற்றுள்ள மொத்த நன்கொடை நிதியைவிட, 2012-13-ல் பாஜக பெற்ற நன்கொடை அதிகம் ஆகும்.

இதுகுறித்து, ஏடிஆர் நிறுவனர்-அறங்காவலர் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர் கூறும்போது, “அரசியல் கட்சிகளின் நன்கொடையில் 90 சதவீதம் பெரு நிறுவனங் களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளன. இது கட்சிகள் மீதான பெரு நிறுவனங்களின் பிடி அதிகரித்து வருவதையே உணர்த்துகின்றன. இது வருத்தமளிக்கிறது.

ஆளும் கட்சியானது நன் கொடை பற்றிய விவரத்தை தெரி விக்காமல் இருப்பது நல்லதல்ல. ஜனநாயக அமைப்புகளுக்கு உரிய மரியாதை தரவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது” என்றார்.

டெல்லி முதலிடம்

கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள், தனி நபர்கள் மூலமாக மொத்தத்தில் தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.45.49 கோடி கிடைத்திருக்கிறது. மகராஷ்டிரத்திலிருந்து ரூ.18.12 கோடியும் குஜராத்திலிருந்துரூ.3.01 கோடியும் கிடைத்திருக்கிறது.

மொத்தம் பெறப்பட்ட நன்கொடையில் காங்கிரஸுக்கு டெல்லியிலிருந்து அதிகபட்சமாக ரூ.39.05 கோடி கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.54.9 லட்சமும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.1.88 கோடியும் நன் கொடை கிடைத்துள்ளது. மகாராஷ்டிரத்திலிருந்து அதிகபட்ச மாக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.8.02 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

2013-14-ல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பெறப்பட்ட நன்கொடை ரூ.2.38 கோடி (3.09%). இனி ரூ.20 ஆயிரத் துக்கு மேல் ரொக்கமாக நன் கொடை பெறக்கூடாது என மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்திருப் பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE