4 மாதங்களாக கோமா நிலையில் நீடிக்கும் ஜஸ்வந்த் சிங்

By ஐஏஎன்எஸ்

4 மாதங்களுக்கு முன்பு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்னும் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்ற மருத்துவர்கள் கூறும் போது, “ஜஸ்வந்த் சிங் கோமா நிலை நீடிக்கிறது, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முன்னேற்றமும் இல்லை” என்றனர்.

76 வயதாகும் ஜஸ்வந்த் சிங் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனது இல்லத்தில் நினைவிழந்து கிடந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்பாக, இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் 8 மாதங்கள் கோமாவில் வீழ்ந்து ஜனவரி 2014-ல் மரணமடைந்தார்.

இந்தியத் தலைவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி 2008ஆம் ஆண்டு இருதய ஸ்ட்ரோக் காரணமாக கோமாவில் வீழ்ந்தார்.

முன்னாள் கர்நாடக முதல்வர் வீரேந்திர பாட்டீல் 2 நாட்கள் கோமாவில் வீழ்ந்து பிறகு காலமானார்.

இந்த நிலையில் ஜஸ்வந்த் சிங் 4 மாதங்கள் ஆகியும் இன்னும் நினைவு திரும்பாமல் கோமா நிலையில் இருந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்