சொன்னதை மாற்றிப் பேசுவதால் மோடியின் அரசு ‘யு டர்ன்’ அரசு: காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சொன்னதை மாற்றிப் பேசும் ‘யு டர்ன்’ அரசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் அஜய் மாக்கன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “மக்களவை தேர்தலின் போது பாஜக கொடுத்த வாக்குறுதியையும், ஆட்சிக்கு வந்த பின்னர் அக்கட்சி நடத்து கொள்ளும் விதத்தையும் பார்க்கும் போது, நரேந்திர மோடியின் அரசு பல விஷயங்களில் ‘யு டர்ன்’ அடித்துள்ளது” என்றார்.

இது தொடர்பாக பாஜகவுக்கு எதிராக 30 பக்கங்கள் கொண்ட கையேட்டை அவர் வெளி யிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசு ஒவ்வொரு வாரமும் ஒரு யு டர்ன் அடிப்பதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறி வருகின்றனர்.

கருப்புப் பண விவகாரத்தில் இந்த அரசு வெள்ளை பொய் களை சொல்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தில் தொடர் தோல்வி, இன்சூரன்ஸ் மசோதா விவகாரத் தில் இரட்டை நிலைப்பாடு, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவை பெற்றதன் மூலம் சந்தர்ப்பவாதம் என்பதே இந்த அரசின் பாதையாக உள்ளது.

பாஜ அரசு பல்டி

தூய்மையான அரசு அமைப்ப தாக மோடி உறுதியளித்தார். ஆனால் அவரது அமைச் சரவையில் குற்றச் சாட்டுக்கு ஆளானவர்களை சேர்த்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு தொடர்பாக பல்டி அடித் துள்ளனர். டெல்லியில் தேர்தல் நடத்தாமல் தாமதம் செய்கின்றனர்.

பொய் வாக்குறுதிகள் அளித் தும், அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை கூறியும் தொழில் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கூடிய பிரச்சார பலத்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

ஆட்சி வந்து 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை பொறுத்தவரை யு டர்ன் அடிப்பது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டங்களின் பெயரை மாற்றி தங்கள் திட்டம் போல் அறிவிப்பது, தொழில் நிறு வனங்கள் பலனடையும் வகையில் தேச நலனுக்கு எதிரான முடிவுகளை எடுப்பது ஆகிய 3 பண்புகளை இந்த அரசு கொண்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த அரசு 3 முறை யு டர்ன் அடித்துள்ளது. சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது, அணுஉலை விபத்து இழப்பீடு சட்டம், வங்கதேசத்துடன் நில எல்லை உடன்பாடு ஆகியவற்றில் இந்த அரசு யு டர்ன் அடித்துள்ளது” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்