கருநாகம் கடித்து பலியான வெள்ளைப்புலி

By பிடிஐ

இந்தூரில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் கொடிய விஷமுடைய கருநாகம் கடித்து 3 வயது வெள்ளைப்புலி பலியாகியுள்ளது.

இன்று காலை அதன் கூண்டில் ‘ராஜன்’ என்று அழைக்கப்படும் அந்த வெள்ளைப்புலி இறந்து கிடந்தது. அதே கூண்டின் அருகில் வெள்ளைப்புலியை கடித்த கடித்த கருநாகமும் படுகாயங்களுடன் கிடந்துள்ளது.

இது குறித்து கமலா நேரு உயிரியல் பூங்கா நிர்வாகி உத்தம் யாதவ் கூறும் போது,

“பாம்புக்கும் புலிக்கும் கடும் சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் கடிபட்ட புலி பலியானது. இந்த வெள்ளைப்புலியை சில் தினங்களுக்கு முன்புதான் பிலாயிலிருந்து இங்கு கொண்டு வந்தோம்” என்றார்.

இன்று காலையில் வெள்ளைப்புலியின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் புலி இறந்து விட்டது என்று அவர்கள் அறிவித்தனர்.

கருநாகத்திற்கும் புலிக்கும் இடையே 10 நிமிடங்கள் சண்டை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இறந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது கொடிய விஷத்தினால் உயிரிழந்துள்ளது என்று தெரிந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE