சிஆர்பிஎப் புதிய தலைவராக பிரகாஷ் மிஷ்ரா பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) புதிய இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் மிஷ்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலாக இருந்த திலிப் திரிவேதி கடந்த மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மிஷ்ராவின் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1977-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மிஷ்ரா, இதுவரை மத்திய உள் துறை அமைச்சகத்தில் சிறப்பு செயலாளராக (உள் விவகார பாதுகாப்பு) பணியாற்றி வந்தார். இவர் ஒடிஸா மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

சுமார் 3 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப் படையின் முக்கியப் பணி நக்ஸல்களை ஒழிப்பதாகும். ஒடிஸா மாநில காவல் துறை தலைவராக இருந்தபோதே நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் மிஷ்ரா ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு பிப்ரவரி வரை மிஷ்ரா இந்தப் பதவியில் நீடிப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்