309-வது சட்டப் பிரிவை நீக்கினாலும் உண்ணாவிரதம் இருப்பவர்களை கைது செய்ய தடை இருக்காது: இரோம் ஷர்மிளா வழக்கிலும் திருப்பம் ஏற்படாது

By டி.எல்.சஞ்சீவி குமார்

தற்கொலை முயற்சிக்கான தண்டனை சட்டப் பிரிவு 309ஐ நீக்கினாலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பவர் களை கைது செய்ய தடை இருக்காது. கடந்த 14 ஆண்டு களாக 309-ம் சட்டப் பிரிவின் கீழ் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இரோம் ஷர்மி ளாவின் வழக்கும் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகள் (சிறப் பதிகார) சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மணிப்பூரைச் சேர்ந்த சமூக சேவகி இரோம் சானு ஷர்மிளா 2000-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.போராட்டத்தை முறியடிக்க மணிப்பூர் போலீஸார், அவருக்கு வலுக் கட்டாயமாக நாசித்துவாரம் வழியாக உணவை செலுத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முயற்சிப்பதாக அவர் மீது 309-ம் சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து அவர் இருக்கும் மருத்துவமனையின் பிரிவையே சிறையாக மாற்றி யுள்ளனர். இந்தப் பிரிவின்கீழ் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் அவர் மீது இதே பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டு வருகிறது.

தற்போது 309-வது சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முன்வந்திருப்பதால் இரோம் ஷர்மிளா மீதான வழக்கு என்ன வாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது:

தற்கொலை முயற்சி குற்றம் என்பதற்கான 309-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டாலும் ஷர்மிளாவின் வழக்கில் எந்தத் திருப்பமும் ஏற்படாது. புதுப்புது வழக்குகளை போடு வதற்கு போலீஸாருக்கு சொல்லியா தரவேண்டும். ஷர்மிளா விஷயத்தை பொறுத்த வரை ஆயுதப் படைகள் (சிறப்பதிகார) சட்டத்தை திரும்ப பெறுவது மட்டுமே அவரது போராட்டத்துக்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.309-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டாலும் ஷர்மிளா மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல், மற்றவர்களை வன்முறை செய்வதற்கு தூண்டுதல், தொடர் குற்றம் இழைத்தல் உட்பட ஏராளமான பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்வதற்கு வாய்ப்பு கள் இருக்கின்றன. நீதிமன்றத் தில் என்ன தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து எல்லாம் போலீஸார் வழக்கு போடுவ தில்லை. அப்போதைக்கு சிறையில் அடைக்க வேண்டும்; நீதிமன்றம் விடுவித்தால் மீண்டும் ஒரு வழக்கு போட்டுக் கொள்ளலாம் என்றுதான் வழக்கு பதிவு செய்கின்றனர். அதனால், 309-வது சட்டப் பிரிவு நீக்கத்தின் மூலம் இரோம் ஷர்மிளா விவகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இவ்வாறு நீதியரசர் சந்துரு கூறினார்.

தற்போது பல்வேறு கோரிக் கைகளுக்காக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப் பினர் உள்ளிட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்குகின்றனர். இவர்கள் மீது இதுவரை 309-வது சட்டப் பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துவந்தனர். 309-வது பிரிவு நீக்கப்பட்டால் போலீஸாரின் வேறு நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ஓய்வுபெற்ற டிஜிபி நடராஜிடம் கேட்டோம். அவர் கூறியது:

சில உயர்ந்த நோக்கங்க ளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. ஆனால், திரைப் படத்தை இன்றே ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் உண்ணாவிரதம் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இனிமேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்ப தாக அறிவித்து யாரேனும் போராட்டம் செய்தால் அவர்கள் மீது அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், சென்னை போலீஸ் சட்டம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகள் மட்டுமின்றி, கண் மூடித்தனமாக, கவனக்குறை வாக வாகனம் ஓட்டுதலை தண்டிக்கும் 279-வது சட்டப் பிரிவின் கீழ்கூட வழக்கு பதிவு செய்ய வழி இருக்கிறது. அதனால், 309-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டாலும் உண்ணா விரதம் இருப்பவர்களை கைது செய்வதில் எந்த தடை யும் இருக்காது. இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்