ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில், பெண் நீதிபதியாக உள்ள தன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் துன் புறுத்துவதாகக் கூறி, திருமண மான 9 மாதங்களிலேயே கணவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்துக் கோரியும் நீதி மன்றத்தை நாடியுள்ளார்.
அனந்தபூர் சாய்நகர் பகுதியை சேர்ந்த கே. ஜித்தேந்திராவுக்கும், ஹைதராபாத் மியாபூர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் ஸ்ரீதேவி என்பருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணமாகி ஒரு வாரத் திலேயே தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டுள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், இனி தொடர்ந்து சேர்ந்து வாழ முடியாது என எண்ணிய ஜித்தேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன் அனந்தபூர் நீதிமன்றம் மூலம் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் இரு குடும்பத் தாருக்குமிடையே தகராறு அதிகரித்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை, ஜித்தேந்திரா அனந்தபூர் 2வது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘திருமணமான ஒரு வாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் நான் மனைவியை விட்டு பிரிந்து தற்போது பெற்றோ ருடன் வசித்து வருகிறேன். விவா கரத்து கோரி அனந்தபூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளேன். என் மனைவி தேவி, அவரது தந்தை வெங்கடேஸ்வருலு, தாயார் அனுராதா மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சேகர் ஆகி யோர் என்னுடைய வீட்டில் புகுந்து என்னையும், எனது பெற்றோரையும் தாக்கினர்.
இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. ஆகவே எங்களுக்கு எனது மனைவியின் குடும்பத்தார் மூலம் ஆபத்து உள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago