ரத்தக் கறையுடன் குப்பையில் கிடந்த சிஆர்பிஎப் சீருடைகள்: விசாரணைக்கு உத்தரவு

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் ரத்தக் கறை படிந்த சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) சீருடைகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் சில நாட்களுக்கு முன்ப மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் 14 சிஆர்பிஎப் கொல்லப்பட்டனர். 14 பேர் காய மடைந்தனர். இறந்தவர்களின் உடல் ராய்ப்பூர் மருத்துவமனையில்தான் வைக்கப்பட்டிருந்தது. அதே போல காயமடைந்தவர்களுக்கும் இங்குதான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனை அருகேயுள்ள குப்பை தொட்டியில் ரத்தக் கறை படிந்த சிஆர்பிஎப் சீருடைகள் கிடந்துள்ளன. எனவே இது அந்த வீரர்களுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக சிஆர்பிஎப் தாற்காலிக தலைவர் ஆர்.சி.தயாள் கூறியது: குப்பையில் சிஆர்பிஎப் சீருடைகள் கிடந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில காவல் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்கள். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை கடைநிலை பணியாளர்களிடம் இருந்து சில அரசியல் கட்சி தொண்டர்கள் இந்த சீருடைகளை பெற்றிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்