வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை அரிக்கும் கரையான்கள்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வாரிசு அரசியல் ஜனநாயகத்தை அரிக்கும் கரையான்கள், அவை ஜனநாயகத்தின் அஸ்திவாரத் தையே அரித்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை இறுதிக்கட்டத் தேர் தலை முன்னிட்டு அந்த மாநிலத் தில் பிலாவர் தொகுதி, சான் கெய்ட் மாண்லி பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் தந்தை- மகன் (பரூக் அப்துல்லா- ஒமர் அப்துல்லா), தந்தை-மகள் (முப்தி முகமது- மெகபூபா முப்தி முகமது) ஆட்சிகள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. மாநில மக்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாரிசு அரசியல் என்பது ஜன நாயகத்தை அரித்து தின்னும் கரை யான்கள். அவை ஜனநாயகத்தின் அஸ்திபாரத்தையே அரித்து விடும். ஜம்மு-காஷ்மீரில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. ஒரு டீக்கடைக்காரர் இப்போது நாட்டின் பிரதமர். இதுதான் ஜனநாயகம்.

காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. காஷ்மீரில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் அந்தக் கட்சி ஆதாயம் அடைந்து வருகிறது. இதனால் காஷ்மீர் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.

மாநிலத்தில் வலுவான அரசு அமைய வேண்டும். அப்போது தான் வளர்ச்சிப் பணிகள் உத் வேகம் பெறும். பாஜக ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா மேம்படுத்தப் படும். வேலைவாய்ப்புகள் பெருக் கப்படும். எனவே இந்தமுறை பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பல்வேறு பகுதி களில் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்