பெங்களூருவில் 1,266 சட்டவிரோதப் பள்ளிகள்: டி.பி.ஐ.

By செய்திப்பிரிவு

பெங்களூரு நகரில் சுமார் 1,266 பள்ளிகள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறை (டிபிஐ) தனது இணையதளத்தில் முழுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதில் சில முன்னணி பள்ளிகளும் இடம்பெற்றிருப்பதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த பட்டியலில் உள்ள சுமார் 50 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ. கல்விமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு பிரபல தனியார் பள்ளி ஒன்றும் இந்தப் பட்டியலில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், “இந்த வாரம் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப் போகிறோம்” என்றார்.

இதில் பெரும்பாலான முறைகேடுகள் மழலைப் பள்ளிகளைத் தொடங்குவதில்தான் நடைபெற்றுள்ளது. சுமார் 678 மழலைப் பள்ளிகள் எந்த வித முன் அனுமதியுமின்றி பெங்களூருவில் நடத்தப்பட்டு வருகிறது.

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான 59 பள்ளிகள் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கொண்டுள்ள சுமார் 415 பள்ளிகள் முறைகேடானவை என்று டிபிஐ பட்டியலிட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி பெறாமல் சுமார் 57 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பட்டியலில் உள்ள பள்ளி நிர்வாகங்கள் இன்னும் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பொதுக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

முழுப்பட்டியலையும் காண www.schooleducation.kar.nic.in.என்ற இணையதளத்திற்குச் செல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்