தேர்தல் செலவுக் கணக்கை காட்டாவிட்டால் அங்கீகாரம் ரத்து: பாஜக, காங்., ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

By ஹெச்.ஷேக் மைதீன்

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பா ளர்களின் செலவுக் கணக்கை டிசம்பர் 14-ம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் கட்சி அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, தெலங்கானா உட்பட 20 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சி களுக்கும் தமிழகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, மேகா லயா உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரி களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி யுள்ளது. அதில் கூறியிருப்ப தாவது: கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

1996-ம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, சட்டசபைத் தேர்தல் என்றால் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள்ளாகவும், நாடாளு மன்றத் தேர்தல் என்றால், தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள்ளாகவும் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தலின் போதே இதுபற்றி வேட்பாளர்களுக்கு அறிவுறுத் தப்பட்டு, அதற்கான விண்ணப்பங் களில் கையெழுத்திடுகின்றனர்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், உரிய காலக்கெடு முடிந்த பிறகும் அரசியல் கட்சிகள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நினைவூட்டல், அறிவுறுத்தல் கடிதங்களை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபரில் அனுப்பியது. அதன் பிறகும், நவம்பர் வரைகூட செலவுக் கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, தெலங்கானா, என்.ஆர்.காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் கட்சி, மக்கள் ஜனநாயகக் கூட்டணி, கேரளா காங்கிரஸ் (எம்), கர்நாடகா ஜந்தா பக்‌ஷா, அசாம் கணபரிஷத், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உட்பட 20 கட்சிகள் உள்ளன.

இந்த கடிதம் கிடைத்த 14 நாட்களுக்குள் (டிசம்பர் 14) சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், இந்திய தேர்தல் ஆணைய சின்னங்கள் பதிவு, ஒதுக்கீடு உத்தரவு 1968 - 16 ஏ - படி, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவுகளை மீறியதற்காக கட்சிகளின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கடிதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி களுக்கும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘சம்பந் தப்பட்ட கட்சிகளிடம் தேர்தல் செலவுக் கணக்கை பெற்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்திய தேர்தல் ஆணைய தலை மை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்