கர்நாடகாவில் மண்ணுளி பாம்புகள் விற்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா ஊரக காவல்துறையினர் மண்ணுளிப் பாம்புகளை விற்று வந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரைக் கைது செய்தனர்.

நந்திகோதானஹள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாத் (28), மற்று உடுப்பியைச் சேர்ந்த ஷெரீஃப் (33) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3.5 கிலோ எடையுள்ள பாம்பு ஒன்றையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது.

ஷிகார்புரம் என்ற பகுதியில் மண்ணுளிப் பாம்புகளை விற்று வரும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து போலீஸ் அங்கு விரைந்து அதிரடி சோதனை மேற்கொண்டது.

அப்போது 4 பேருக்கு பாம்பு பாம்பை விற்பதற்காக பேரம் நடந்து கொண்டிருந்தது. போலீஸ் மோப்பம் பிடித்து தேடி வந்ததை அடுத்து விற்றுக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த மினேஷ் என்பவருடன் 2 பேர் தப்பிச் சென்றனர்.

மொத்தம் 5 பேர் இந்த கும்பலில் இருந்துள்ளனர். அதில் 2 பேர் கைது செய்யப்பட மீதி பேரை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்