நேதாஜி பற்றிய முக்கிய புத்தகங்களை மறு பதிப்பு செய்ய முடிவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து எழுதப்பட்ட முக்கிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து வெளியிட, நேதாஜி அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.

ஒடிஸா மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அசோக்குமார் தலைமையிலான குழு நேதாஜி அறக்கட்டளையின் நிதி ஆதாரத்தை ரூ. 2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.

வரும் ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தை பெரும் விழாவாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் தற்போது ஆங்கிலத்தில் ஒலி-ஒளிக் காட்சிகள் வழங்கப்படுகின்றன. இனி, ஒடியா, இந்தி, பெங்காலி மொழிகளிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டாக்கிலுள்ள நேதாஜியின் பரம்பரை வீடு அருங்காட்சியமாக கடந்த 2003-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இதன் அருகிலுள்ள கட்டிடங்களையும் தந்த நிறத்துக்கு மாற்ற கட்டாக் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE