உ.பி.யில் மீண்டும் விவசாய நிலம் வாங்கினார் அமிதாப்

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் விவசாய நிலம் வாங்கி உள்ளார்.

தலைநகர் லக்னோவிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது ககோரி கிராமம். இந்தப் பகுதி இன்னும் அரசு பதிவேடுகளில் விவசாயப் பகுதியாகவே உள்ளது. இங்குள்ள நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார்.

இதற்காக அமிதாப் மற்றும் அபிஷேக் சார்பில் அவர்களின் வழக்கறிஞர்களான ராஜேஷ் யாதவ் மற்றும் விஷால் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் லக்னோ பதிவா ளர் அலுவலகத்துக்கு வந்து நிலத்தை பதிவு செய்தார்கள். மொத்தம் ரூ.6 கோடி கொடுத்து இந்த நிலத்தை வாங்கி உள்ளார் அமிதாப் பச்சன். இதற்கான பத்திரப் பதிவு செலவு ரூ.29.85 லட்சம் ஆகும்.

அலகாபாத்தில் பிறந்த அமிதாப் பச்சன், 2010-ம் ஆண்டு தனது பெயரிலும் மனைவி ஜெயா பச்சன் பெயரிலும் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். இப்போது அமிதாப் வசிக்கும் மகாராஷ்டிரா மாநில சட்டப்படி, விவசாயிகள் பட்டியலில் இடம் பெறுவதற்காக இந்த நிலத்தை அவர் வாங்கியதாகக் கூறப்பட்டது. அதாவது விவசாயி என்ற அடிப்படையில் அம் மாநிலத்தின் முக்கிய புறநகர் பகுதிகளில் பண்ணை வீடுகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு தனது குடும்ப நண்பரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் முதல்வ ராக இருந்தபோது (2007-ம் ஆண்டு) பாராபங்கியில் அமிதாப் விவசாய நிலம் வாங்கியது பெரும் சர்ச்சைக் குள்ளானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்