வெற்று வாக்குறுதிகளால் வளர்ச்சி வராது: சோனியா காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி மக்களின் துயரங்களின் மீது அரசியல் நடத்துகிறார். அவர் தரும் வெற்று வாக்குறுதிகளால் வளர்ச்சி ஏற்படாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷங்கூஸ் தொகுதியில் வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோனியா காந்தி பேசியதாவது:

"வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ள இந்தப் பகுதிக்கு பிரதமர் மோடி வந்து சென்றார். வாக்குறுதி களைப் பட்டியலிட்டார். சில இழப் பீடும் தருவதாகத் தெரிவித்தார். ஆனால் உண்மை நிலவரம் என்ன? நீங்கள் வெற்று வாக்குறுதிகளால் அவதிக்கு உள்ளாகியிருக்கிறீர்கள்.

உங்களின் துயரங்களைக் கேட்க வேண்டிய நேரமிது. உங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைச் செய்து தரும் நேரமிது. ஆனால் மோடி தலைமையிலான அரசு எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் உள்ளது.

2005ம் ஆண்டு இங்கு நில நடுக்கம் ஏற்பட்டபோது காங்கிரஸ் அரசு எவ்வளவு விரைவாகச் செயல்பட்டது. இப்போது ஏன் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடைபெறுகின்றன?

வெற்று வாக்குறுதிகளால் வளர்ச்சி ஏற்படாது. கனவுகளைக் காட்டுவது எளிது. ஆனால் சாதி மற்றும் மதத்தால் பிளவுபட்டிருக் கும் ஒரு சமூகத்தில் அவற்றை நிஜமாக்கிக் காட்டுவதுதான் மாபெரும் சவால். ஒவ்வொருவருக் கும் வளர்ச்சியில் பங்கு கிடைக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் அதைச் செயல்படுத்தினோம்.

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டபோதும் நீங்கள் வாக்களிக்க முன் வந்துள்ளீர்கள். உங்களின் அர்ப்பணிப்புக்குத் தலை வணங்குகிறேன்". இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE