இலங்கை அதிபர் ராஜபக்ச, ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார்.ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்று மாலை 4.30 மணி அளவில் தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். அவரை அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலமாக 2-வது மலைவழிப்பாதை வழியாக திருமலைக்கு சென்றார்.
பின்னர் திருமலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று ரிலையன்ஸ் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். நேற்று இரவு திருமலையில் தங்கிய ராஜபக்ச, இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏழுமலையானை சுப்ரபாத சேவையின்போது தரிசனம் செய்வார் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை அதிபரின் திருப்பதி வருகையை முன்னிட்டு நேற்று காலை முதலே திருப்பதியில் உள்ள அனைத்து லாட்ஜ்கள், சத்திரங்கள், தேவஸ்தான விடுதிகள், ரயில் நிலையம் போன்ற இடங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி நகரத்தில் ராஜபக்ச பயணம் செய்யும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மலைவழிப்பாதை முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே ராஜபக்சவின் திருப்பதி வருகைக்கு எதிர்ப்பு தெரி வித்து, தமிழகத்தில் இருந்து மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமா னோர் நேற்று கார், வேன், ரயில், பஸ்கள் மூலம் திருப்பதி வந்து சேர்ந்தனர்.
இவர்கள் திருப்பதி பஸ் நிலையம், அம்பேத்கர் சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் “தமிழின துரோகி ராஜபக்ச திரும்பிப் போ” என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பதியில் பதற்றமான சூழல் நிலவியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago