அமைச்சர்கள் செய்யும் தவறுக்கு பிரதமரே பொறுப்பு: சமாஜ்வாதி எம்.பி.

By செய்திப்பிரிவு

கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தொடர்ந்து 3-வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கட்டாய மதமாற்ற விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று காலை, மாநிலங்களவை கூடியவுடன் இவ்விகாரத்தை சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பினார். அவர் பேசியதாவது, "அமைச்சர்கள் அறிக்கைகள் வெளியிடும்போது லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது என பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கொள்கை நிலைப்பாடாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது. அமைச்சர்கள் செய்யும் தவறுக்கு பிரதமரே பொறுப்பாவார். அமைச்சர்கள் சர்ச்சைக் கருத்தை வெளியிடும்போது பிரதமரே அதற்கு விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.

சமாஜ்வாதி எம்.பி.யின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, அவ்வாறு எந்த ஒரு முடிவும் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்