கேஜ்ரிவாலுடன் செல்ஃபி எடுக்க ரூ.500; விருந்தில் பங்கேற்க ரூ.20 ஆயிரம் கட்டணம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லுக்கு நிதி திரட்ட ஆம் ஆத்மி கட்சி 'செல்ஃபி வித் மப்ளர் மேன்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ரூ. 500 செலுத்துபவர்கள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து 'செல்ஃபி' புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில ஆம் ஆத்மி மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் பெங்களூருவில் நேற்று கூறியதாவது:

ஜனவரி 11-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால் பெங்களூரு வருகிறார். அப்போது அவருடன் அமர்ந்து விருந்து சாப்பிட ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போல அரவிந்த் கேஜ்ரிவாலை ஊடகங்கள் 'மப்ளர்மேன்' என அழைக்கின்றன. எனவே கேஜ்ரிவாலுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 'செல்ஃபி வித் மப்ளர்மேன்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

ரூ.500 கட்டணம் செலுத்து பவர்கள் கேஜ்ரிவாலுடன் ஜனவரி 11-ம் தேதி 'செல்ஃபி' எடுத்துக் கொள்ளலாம். 25 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கேஜ்ரிவாலுடன் டீ பார்ட்டியில் பங்கேற்பார்கள் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE