டெல்லி பலாத்கார சம்பவம்: வாடகைக் கார் நிறுவனத்துக்குத் தடை; கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு போலீஸ் காவல்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் கடந்த வாரம் வாடகைக் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வாடகைக் கார் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, மக்களவையில் அறிக்கை வாசித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாடகை காரில் தனியாக வீடு திரும்பிய தனியார் நிதி நிறுவனத் தில் பணியாற்றும் 27 வயது இளம் பெண், கார் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கார் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் மது ராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஷிவ்குமார் யாதவை வரும் 12-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அம்பிகா சிங் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரால் அடையாளம் காட்டப்படும் நடைமுறைக்கு ஒத்து ழைக்க, ஷிவ்குமார் யாதவ் மறுத்துவிட்டார்.

ஆம் ஆத்மி, காங். ஆர்ப்பாட்டம்

ராஜ்நாத் சிங் வீட்டின் முன் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் அணி (என்.எஸ்.யூ.ஐ) சார்பில் அதன் தொண் டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக டெல்லி பாஜக எம்.பி.க்கள் ஏழு பேரும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விவாதித்தனர். அப்போது, இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி மாநில காவல்துறை தலைமை ஆணை யர் பி.எஸ்.பாசித்துக்கு உத்தர விட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

உபேர் கால் டாக்ஸிக்கு தடை

இந்த சம்பவத்தில் தொடர் புடைய ‘உபேர் கால் டாக்ஸி’ நிறுவனத்தை டெல்லி அரசு தடை செய்துள்ளது. டெல்லியில் 2009ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் பிரபலமான உபேர் நிறுவனம் சுமார் 200 நகரங்களில் இயங்கி வருகிறது. டெல்லியில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளில் ஈடுபட அந்நிறுவனத்துக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி உபேர் நிறுவனம் தனது கார்களை வாடகைக்கு அளிப்பதில் தவறுகள் செய்துள்ளது. இந்த சட்ட மீறல் மற்றும் அதன் ஓட்டுநர் செய்த கிரிமினல் குற்றம் காரணமாக உபேர் நிறுவனத்துக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

பலாத்கார சம்பவத்தில் குற்ற வாளியான ஷிவ் குமார், ஏற்கெனவே 2011-ம் ஆண்டு குர்காவ்னில் 22 வயது இளம்பெண்ணை காரில் அழைத்துச் செல்லும்போது, பலாத் காரம் செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டார். இதற்காக, ஏழு மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி விடுதலையானார். இந்த சம்பவத்தில் ஷிவ் குமார் சிக்கியது உபேர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இதற்கு, அந்த நிறுவனம் ஷிவ் குமாரை பணியில் சேர்க்கும் முன் சட்டப்படி காவல்துறையினரிடம் பெற வேண்டிய ஓட்டுநரின் நன்னடத்தை சான்றிதழை பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. குற்றவாளியான ஷிவ் குமாருக்கு மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்