பிஹாரில் 200 தலித்துகள் கிறித்துவ மதத்தை தழுவினர்: விசாரணை கோரும் முதல்வர்

போத் கயாவின் அடியா என்ற கிராமத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த மகாதலித்துகள் உள்ளூர் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கிறித்துவ மதத்தை தழுவினர்.

முதல்வர் ஜீதன் ராம் மஞ்சி, இதே வகுப்பைச் சேர்ந்தவர், இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது குறித்து விசாரணைக்கு கோரியுள்ளார்.

இதற்கு முன்னர் 2008-ஆம் ஆண்டு இதே கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கிறித்துவ மதத்தை தழுவியதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் முன்னேற்றம் காணவே கிறித்துவ மதத்தை தழுவியதாக அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. கிராமத் தலைவர் முனியா தேவி, “பள்ளியில் நிகழ்ச்சி நடந்தது உண்மை” என்று கூறியபோதும், மதமாற்றம் நடந்ததா என்பது பற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த மதமாற்றம், வலுக்கட்டாய மதமாற்றமா என்பதை ஆய்வு செய்ய விசாரணை செய்ய மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE