சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துக: அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுரை

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மோடி அரசில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுவரும் அதேவேளையில், இதனை அதிகாரிகள் கவனமாக கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வந்துள்ளது.

டிசம்பர் 5-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அலுவலக ரீதியான தகவல் பரிமாற்றத்திற்காக இந்தியாவுக்கு வெளியில் சர்வர் வைத்திருக்கும் இணைய நிறுவனங்களின் சேவையை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு கருத்தை பதிவு செய்தாலும், தனது முழுமையான அடையாளத்தை வெளிப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், அறிவிப்புகள், தகவல்கள், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள் பல வெளிநாட்டு தளங்கள். அவை பின்பற்றும் சட்ட திட்டங்கள் வேறு.

எனவே, சமூக வலைத்தளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், ரகசியமாக காக்கப்பட வேண்டிய தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது. அதிகாரிகள், அரசு நிலைப்பாட்டின்மீது தங்களது கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்றெல்லாம் அந்த சுற்றறிக்கையில் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் பேஸ்புக், ட்விட்டர் வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தனிநபர் தெரிவிக்கும் கருத்து மற்றவர்களால் பொது வெளியில் விமர்சிக்கப்படுவதால் அவற்றில் தகவல்களை பதிவதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டுமென அறிவுறுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்