கச்சத்தீவை மீட்க மசோதா: மக்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது, துன்புறுத்தப் படுவது குறித்தும், இதில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அதிமுக எம்.பி.க்கள் நேற்று மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பதால்தான் நமது பிரதமர் இலங்கை அதிபரிடம் 3 முறை இது தொடர்பாக பேசியுள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு இலங்கை அதிபரிடம் நமது பிரதமர் பேசியதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்பெல்லாம் 60 நாட்களுக்குப் பிறகே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போது மூன்று, நான்கு நாட்களில் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். மீனவர்களின் பாதுகாப்புக்காக தானியங்கி அடையாளம் காணும் கருவி அமைப்பது உட்பட பல பாதுகாப்பு விஷயங்களை ஆய்வு செய்து வருகிறோம். நமது மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறவேண்டியுள்ளது. இதில், நீண்டகால தீர்வு காண்பதற்காக மீனவர் சங்கத்தினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

எங்களது அரசு பதவியேற்ற பிறகு, இலங்கை அரசின் தொனி மாறியுள்ளது. எனவே, அவர்கள் மீதான நமது தொனியும் மாற வேண்டியுள்ளது. இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் கலந்து கொள்வதற்காக மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜனிடம் சிறப்பு அனுமதிபெற்ற தம்பிதுரை கூறுகையில், “கச்சத்தீவு பிரச் சினை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பேச முடியாது என்று அமைச்சர் கூறினார். நாடாளுமன்றம்தான் உயரிய அமைப்பு. சமீபத்தில் வங்க தேசத்துக்கு சில பகுதிகளை அளிக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட போது அப்படிச் செய்யவில்லை. எனவே கச்சத்தீவை மீட்க அரசு, நாடாளு மன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டுவரவேண்டும்’’ என வலி யுறுத்தினார்.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எழுப்பியவர்களில் ஒருவரான அதிமுக மக்களவை தலைவர் டாக்டர். பி.வேணுகோபால், தமிழக மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி வருகிறது. இது வரை 500 தாக்குதல்கள், 50 முறை படகுகள் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்