ஆசம் கான் மீது மேலும் ஒரு வழக்கு

By செய்திப்பிரிவு

கார்கில் போரில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தது முஸ்லிம் வீரர்கள்தான் என்று ஆசம் கான் அண்மையில் பேசினார். இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகள் தொடர்பாக அவர் மீது கடந்த சனிக்கிழமை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் ஷாம்லி மாவட்டத்தில் மதஉணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது ஞாயிற்றுக்கிழமை புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து பேசிய ஆசம்கான், அப்பாவி மக்களின் ரத்தத்தால் மோடியின் கைகளில் ரத்தக் கறை படிந்துள்ளது, அவர் நாட்டை ஆளவே கூடாது என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோடேப்பை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள், தானா பவன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்