கேரள சட்டமன்ற கட்டிடத்தில் லிப்ட் அறுந்தது: 3 அமைச்சர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

கேரள சட்டமன்ற கட்டிடத்தில் நேற்று லிப்ட் அறுந்து விழுந்த சம்பவத்தில் 3 அமைச்சர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின், கேரள சட்டமன்றம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாநில தொழில்துறை அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி, பொதுப் பணித்துறை அமைச்சர் வி.கே.இப்ராஹிம் குஞ்சு, உணவுத்துறை அமைச்சர் அனூப் ஜேகப் மற்றும் இத்துறைகளின் ஊழியர்கள் சிலர், விஐபி லிப்ட் வழியே முதல் தளத்தில் இருந்து தரை தளத்துக்கு வரமுயன்றுள்ளனர்.

இந்நிலையில் வழியில் ரோப் அறுந்ததால் லிப்ட, தரை தளத்துக்கு கீழுள்ள 2-வது சுரங்க தளத்தில் விழுந்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். என்றாலும் தங்களுக்கு உடல் வலி ஏற்பட்டதாக அமைச்சர் அனூப் ஜேகப் கூறினார்.

லிப்ட் அறுந்தது குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்