ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஜம்முவில் கூடுதல் பாதுகாப்பு:

ஜம்மு-காஷ்மீரில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ஒமர் அப்துல்லா, 3 அமைச்சர்கள், தற்போது எம்எல்ஏ.க்களாக உள்ள 10 பேர் உட்பட 144 வேட்பாளர்கள் களம்காண்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவை முடக்கும் நோக்கத்தில்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 13 ராணுவ வீரர்கள் 8 தீவிரவாதிகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த உரி, ட்ரால் தொகுதிகள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன. கடந்த இரு கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, முன்னாள் பேரவைத் தலைவர் சி.பி. சிங், 3 அமைச்சர்கள் உட்பட 289 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் மாலை 3 மணி வரையும், ராஞ்சி, ஹடியா, கான்கே தொகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த இரு கட்ட வாக்குப் பதிவுகளில் முறையே 61.92, 64.68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

3-ம் கட்ட வாக்குப்பதிவு நடை பெறும் 17 தொகுதிகளில் 2 தொகுதிகள் தாழ்த்தப்பட் டோருக்கான தனித் தொகு திகள், கிஜ்ரி தொகுதி பழங்குடி யினருக்கான தனி தொகுதியாகும். தேர்தலை யொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்