பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஒமர் அப்துல்லா

பாஜகவுடன் கூட்டணி அமைப் பதற்கு 99 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று தேசிய மாநாட்டு செயல் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சோனவார், பீர்வா ஆகிய இரு தொகுதிகளில் ஒமர் போட்டி யிட்டார். இதில் சோனவார் தொகுதி யில் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது அஸ்ரப் மிர், முதல்வர் ஒமர் அப்துல்லாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

எனினும் பீர்வா தொகுதியில் அவர் 1000 வாக்குகள் வித்தியாசத் தில் காங்கிரஸ் வேட்பாளர் நசீர் அகமது கானை தோற்கடித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து கூறியதாவது: முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைப் பது குறித்தோ, புதிய ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்தோ இதுவரை சிந்திக்கவில்லை.

கூட்டணி தொடர்பாக பாஜக தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அழைப்பும் வரவில்லை. என்னைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி அமைவதற்கு 99 சத வீதம் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்