ஐபிஎல் செயல்பாடுகளில் தலையிட மாட்டேன் என உறுதி: பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் கோரிக்கை

ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தின் அன்றாடப் பணிகளில் தலையிட மாட்டேன் என்று உறுதியளிக் கிறேன். பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்கும் என்.சீனிவாசன் தரப்பில் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் என்.சீனிவாசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது கூறியதாவது:

ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டம் தொடர்பாக அமைக்கப் படவுள்ள உயர் அதிகாரக் குழுவின் விசாரணை முடிவடையும் வரை, ஐபிஎல் விவகாரங்களிலும், நிர்வா கத்திலும் தலையிடமாட்டேன் என்று என்.சீனிவாசன் உறுதி யளித்துள்ளார். எனவே, அவர் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்க வேண்டும்” என்றார்.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த முகுல் முத்கல் குழுவின் அறிக்கையை பரிசீலித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனையை தீர்மானிக்கவும், பிசிசிஐ தலைவராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளராகவும் இருந்ததன் மூலம் என்.சீனிவாசன் இரட்டை ஆதாயம் பெற்றது தொடர்பாகவும் விசாரிக்க உயர் அதிகாரக் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ எதிர்ப்பு

உயர் அதிகாரக் குழு அமைப்பதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிசிசிஐ மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் பேசும்போது, “உயர் அதிகாரக் குழு அமைத்தால், அது பிசிசிஐயின் தன்னாட்சி உரிமையை பாதிக்கும். அதுபோன்ற குழு அமைப்பது தொடர்பாக பிசிசிஐ-யின் ஆட்சி மன்றக் குழுதான் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்