கோட்சேவுக்கு கோயில் கட்ட லக்னோவில் நிலம் தயார்: இந்து அமைப்பு தகவல்

நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட லக்னோவில் நிலம் தேர்வு செய்யப்பட்டதாக, அகில இந்திய இந்து மகாசபையின் உத்தரப் பிரதேச பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் சிதாப்பூரில் நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்டும் முயற்சியில் அந்த இடங்களில் இந்து மகாசபை பூமி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து லக்னோவிலும் கோட்சேவுக்கு கோயில் கட்டுவதற்காக நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அகில இந்திய இந்து மகாசபை தெரிவித்துள்ளது.

லக்னோ சுற்றுவட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலத்துக்கு விரைவில் பூமி பூஜை நடத்த உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைப்பின் தேசிய செயலாளர் முன்னா குமார் ஷர்மா, 'தி இந்து'-விடம் கூறுகையில், "லக்னோ அருகே உள்ள ஹைதர்கஞ்சின் பப்தமாமாவில் கோட்சேவுக்காக கோயில் அமைக்கப்படும். இந்த நிலம் மகாசபைக்கு சொந்தமான நிலமாகும்.

ஜனவரி 30-ஆம் தேதிக்குள்ளாக கோட்சேவின் சிற்ப வடிவமைப்பு வேலையை நாங்கள் தொடங்க உள்ளோம். அதே தினத்தில் கோட்சேவின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'சூர்ய திவாஸ்' நிகழ்ச்சியும் நடத்தப்படும். நாடு முழுவதிலும் இதனை விழாவாக கொண்டாடவும் திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE