கண்புரை அறுவை சிகிச்சையில் 10 பேருக்கு பார்வையிழப்பு: இமாச்சலப் பிரதேசத்தில் சோகம்

இமாச்சலப் பிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் பங்கேற்ற 10 பேர் பார்வையிழந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம், நூர்புர் அருகேயுள்ள கந்த்வால் கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 60 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அறுவைச் சிகிச் சைக்குப் பிறகு 10 பேர் பார்வை யிழந்துள்ளனர். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்ற பின்னரும் பார்வை திரும்ப வில்லை.

இதைத்தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்கள் சில நாள்களுக்கு முன்பு கந்த்வால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்வையிழப்பால் பாதிக்கப் பட்ட ரகுவீர் சிங் கூறியபோது, அறுவைச் சிகிச்சைக்கு முன்பு சிறிது கண்பார்வை தெரிந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எதுவுமே தெரியவில்லை. எங்களுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரி வித்தார்.

இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேச அரசு சார்பில் உயர்நிலை விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை மூத்த அதிகாரி சர்மா கூறியபோது, 10 பேர் பார்வை இழந்திருப்பது ஒரு முக்கியமான பிரச்சினை. இதுகுறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.

கடந்த நவம்பரில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ் பூரில் கண்புரை அறுவை சிகிச்சை முகாமின் போது 14 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE