காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விவகாரத்தில் இன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அந்த சம்பவத்தைக் கண்டித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் ரஜனி படேல் கூறும் போது, “பாலியல் குற்றவாளிகள் பெயர்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற முந்திய ஐமுகூ அரசின் முயற்சி அமைதியாக புதையுண்டு போய்விட்டது” என்றார்.
அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் குற்றவாளிகள் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ரஜனி படேல் முந்தைய அரசின் இத்தகைய முயற்சியை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு பற்றி பாஜக அனைத்து உறுதிமொழிகளையும் அளித்தது. ஆனால் இப்போதுதான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் பெரிதும் இருந்து வருகின்றனர் என்று கூறிய ரஜனி படேல், பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநருக்கு எதிராகவும், அவருக்கு போலிச் சான்றிதழ்களை வழங்கிய நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து பாஜக உறுப்பினர் விஜய் கோயெல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். மேலும், குற்றவாளியை 3 நாட்களுக்குள் பிடித்த டெல்லி காவல்துறையையும் அவர் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago