ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் காணாமல் போன ஆஸ்திரேலிய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக காவலாளி உட்பட 3பேரை போலீ ஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அனந்தபூர் மாவட்ட எஸ்.பி. ராஜசேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாய்பாபாவின் தீவிர பக்தையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோனி ஆன்னி லட்கேத் (75), கடந்த ஜூலை 23-ம் தேதி புட்டபர்த்திக்கு வந்துள்ளார். அங்கு விவேகானந்தா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழி கிரைட்டி டி சஸ்டர் என்பவருடன் தங்கி இருந்தார்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சில பொருட்களை வாங்க பெங்களூருக்கு செல்வதாக தனது தோழியிடம் கூறிவிட்டுச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது தோழி கடந்த அக்டோபர் 12-ம் தேதி புட்டபர்த்தி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் லட்கேத் தங்கி இருந்த குடியிருப்பின் காவலாளி மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் லட்கேத்தை ரூ. 20 ஆயிரம் பணத்துக்காக 2 நண்பர்கள் உதவியுடன் கொலை செய்து பரஸ்பரபல்லி கிராமத்தில் சடலத்தை புதைத்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.
நேற்று காலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. எலும்புக் கூடாக இருந்த சடலத்துடன் இருந்த தங்க செயின் மற்றும் இரண்டு மோதிரங்களை வைத்து அது லட்கேத்தின் சடலம்தான் என சக நாட்டவர் அடையாளம் காட்டினர். இது தொடர்பாக காவலாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி. ராஜசேகர் பாபு தெரிவித்தார்.
தொடரும் வெளிநாட்டவர் கொலை
புட்டபர்த்தியில் வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் வந்து செல்கின் றனர். அங்குள்ள அமைதியான சூழல் குறிப்பாக வெளிநாட்டு பக்தர் களை அதிகம் கவர்ந்துள்ளது.
ஆனால் இங்கு சில துயர சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வெளிநாட்டு பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அங்குள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில்,
‘‘கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இங்குள்ள கொத்த செருவு, சித்ராவதி ஆகிய நதிக்கரைகளில் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டு, சடலங்கள் பல்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ளன. இதில் சில வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வராமல் உள்ளன. பலர் காணாமல் போய் உள்ளனர். வெளிநாட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். புட்டபர்த்தியில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago