குடும்ப உறவாக மாறும் அரசியல் நட்பு: லாலு மகளை மணக்கிறார் முலாயம் பேரன்

By ஆர்.ஷபிமுன்னா

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் அரசியல் நட்பு, குடும்ப உறவாக மலர உள்ளது. லாலுவின் மகளை, முலாயம்சிங்கின் பேரன் திருமணம் செய்யவுள்ளார்.

தாத்தாவை போல் குஸ்தி பயில்வான்

முலாயம்சிங்கின் இளைய பேரன் தேஜ் பிரதாப் சிங். தனது தாத்தாவை போல் குஸ்தி பயில் வான் ஆவார். 26 வயதான இவர், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற மெயின்புரி மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, அரசியலில் நுழைந்துள்ளார்.

முலாயம்சிங், மக்களவை தேர்தலில் வென்ற இருதொகுதி களில் ஒன்றான மெயின்புரியை தேஜ் பிரதாப் சிங்குக்காக ராஜினாமா செய்தார். அது முலாயம் வழக்கமாக போட்டி யிடும் தொகுதி என்பதால் தேஜ் பிரதாப்புக்கு எளிதான வெற்றி கிடைத்தது. இவரை தனது மாப்பிள்ளையாக்க முடிவு செய்து விட்டார் லாலு.

பிப்ரவரியில் திருமணம்

இது குறித்து முலாயம்சிங்கின் உறவினர்கள் கூறும்போது, ‘தனது மூத்த மகள் மிசா பாரதியை, முலாயம்சிங்கின் மகன் அகிலேஷ் சிங்கிற்கு மணமுடிக்க வாலு விரும் பினார். அது முடியவில்லை. தற் போது, இளையமகள் ராஜ லட்சுமியை, தேஜ் பிரதாப்புக்கு மணமுடிக்கவுள்ளார். இவர்களது திருமணம், பிப்ரவரியில் நடை பெற அதிக வாய்ப்புள்ளது.’ எனத் தெரிவித்தனர்.

இரண்டாவது அரசியல் உறவு

லாலுவுக்கு ஆறு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஐந்து பெண்களுக்கு திருமணமாகிவிட்டது. ராஜ லஷ்மி 6-வது மகளாவார். தனது ஐந்தாவது மகளான அனுஷ்காவை ஹரியாணாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான விஜய்சிங் யாதவின் மகன் சிரஞ்சீவி ராவுக்கு கடந்த 2012-ல் மணம் செய்து வைத்திருந்தார் லாலு.

திருமண ரகசியம்

முலாயம்சிங்கின் புதிய உறவால், பிஹாரில் லாலுவுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

காரணம், ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சியில் தனக்கு கிடைத்த பிரதமர் வாய்ப்பை லாலுவால் முலாயம் இழந் திருக்கிறார். இதை, முலாயம்சிங், ஒருமுறை வெளிப்படையாகவும் கூறி இருந்தார்.

இந்த வெறுப்பினால் முலாயம் ஒவ்வொரு தேர்தலிலும் பிஹாரில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தி லாலுவின் ஒருசில சதவிகித அளவிலான யாதவ் சமூகத்தின் வாக்குகளை பறித்து வந்தார். இதை தடுக்க லாலு, தனது மகளை முலாயம் குடும்பத்தில் மணமுடிக்க திட்டமிட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்