சத்தீஸ்கரில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட 12 பேர் பலி: நீதி விசாரணைக்கு முதல்வர் ரமண் சிங் உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவ முகாமில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களில் 12 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.கே. குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் ரமண்சிங் உத்தரவிட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அடுத்த பெண்டாரி கிராமத்தில் நேமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கான கருத்தடை முகாம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 12 பேர் உயிரிழந்தனர். 49 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, லேப்ராஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே. குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் அந்த அறுவை சிகிச்சை களை மேற்கொண்டவர்.

உயிரிழப்பு ஏற்பட அரசு நிர்வாகம்தான் காரணம் என குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிலாஸ் பூர் காவல்நிலையத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அப்பெண்களுக்கு வலிநிவாரணி மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரை கள் வழங்கப்பட்டன. அவற்றை உட்கொண்ட பிறகே, அவர்களுக்கு வாந்தி வந்துள்ளது.

மருந்துத் தொற்று காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்க வேண்டும். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உண்மையான காரணம் தெரியவரும். அறுவை சிகிச்சை முறையற்ற வகையில் மேற்கொ ள்ளப்பட்டது என்ற கருத்தில் உண்மையில்லை.

தற்போதைய தகவல்களின்படி, முகாமில் வழங்கப்பட்ட மாத்திரை கள் முறையாக பரிசோதிக்கப் படவில்லை. உள்ளூர் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முகாமில், தரமான மாத்திரைகள் வழங்கப் பட்டிருந்தால், இத்துயரம் நிகழ்ந் திருக்காது.

மாத்திரைகளைப் பார்த்த உடனேயே அவற்றின் தரத்தை கணிக்க முடியாது. பரிசோதனைக்குப் பிறகே அது தெரிய வரும். இந்த மருந்து களை ஏற்பாடு செய்ததற்கு அரசு நிர்வாகம்தான் பொறுப்பு.

இத்துயர சம்பவத்துக்கு என்மீது மட்டும் தனியாக குற்றம் சுமத்த முடியாது. ஒட்டு மொத்த நிர்வாகமும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். என் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ, அதே குற்றச்சாட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஒன்றிய சுகாதார அலுவலர் ஆகியோர் மீதும் பதிவு செய்யப்பட வேண்டும்.

நிர்வாகத்தைக் காப்பாற்று வதற்காக நான் பலிகடா ஆக்கப் பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

13 பேர் பலி

தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்களை அரசு நடத்தியது. அவற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் கடந்த 4 நாட்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெண்டாரி கிராமத்தில் நடந்த முகாமில் சிகிச்சை பெற்றவர்களில் 12 பேரும், பெந்தரா ஒன்றியத்தில் மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 56 பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதில், பலரின் நிலை மோசமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

மருந்து நிறுவனத்துக்கு சீல்

உணவு மற்றும் மருந்து நிர்வாக கட்டுப்பாட்டாளர் ரவி பிரகாஷ் குப்தா கூறும்போது, “மஹாவர் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு அங்கிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மாநிலத்துக்குள் விற்பனை செய்யவும், விநியோகிக்கவும் தடை செய்துள்ளோம். இதுதொடர்பாக, மருந்தாளுநர்கள், மருந்து விநியோகிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

தரக்குறைவானவை என சந்தேகிப்படும் அம்மருந்துகளின் மாதிரிகள் கொல்கத்தாவிலுள்ள மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, பரிசோதிக்கப்படவுள்ளன.

இச்சோதனையின் போது, மஹாவர் பார்மா நிறுவன வளாகத்துக்குள் குறிப்பிட்ட அளவு மருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்