குஜராத்தியர்களுக்கு எதிரான கருத்து: சர்ச்சையில் மகாராஷ்டிர காங். எம்.எல்.ஏ.

By பிடிஐ

மராத்தியர்களை வெறுக்கும் குஜராத்தியர்களை அகற்றுவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தை மும்பையில் தொடங்கவுள்ளேன் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே கூறியிருப்பது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டரில் அவர் பதிவிடும் போது, “தூய்மை இந்தியா திட்டத்தில் இணையவிருக்கிறேன். மராத்தியர்களை வெறுக்கும் குஜராத்தியர்களை முற்றிலும் அகற்றுவதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தில் இணையவிருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஏற்கெனவே அவர், மும்பை நகரை குஜராத்தியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கின்றனர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரே இந்த நிதேஷ் ரானே.

தனது கருத்தை எதிர்ப்பவர்களுக்காக அவர் கூறிய போதும், தினமும் மராத்தியர்களுக்கு எதிராக குஜராத்தியர்கள் வெளியிடும் துவேஷப் பேச்சையும் அனைவரும் கவனிக்க வேண்டும் என்றார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்ரே, இந்தக் கருத்தை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என்றும் இது குறித்து ரானேயிடம் பேசுவோம் என்றும் இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்