எல்லைப் பிரச்சினையை தீர்க்க கால அவகாசம் வேண்டும்: இந்தியாவுக்கான சீன தூதர் கருத்து

இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையை தீர்க்க கூடுதல் கால அவகாசம் வேண்டுமென்று இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியது:

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயை சீனா முதலீடு செய்ய இருக்கிறது. எல்லைப் பிரச்சினையை பொறுத்தவரையில் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை எட்ட வேண்டும். பேச்சு நடத்துவதன் மூலம் தீர்வை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை.

எல்லைப் பிரச்சினை ஒரு புறம் இருந்தாலும் இந்தியா சீனா இடையே வர்த்தக உறவு மேம்பட்டு வருகிறது. முக்கியமாக எரிசக்தி துறையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. சீன நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியாவில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.

சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கெனவே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்