செயல்திறனை மதிப்பிட திக்விஜய் சிங் வருகை: கலக்கத்தில் கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் - அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்க திட்டம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ஆகி யோரின் செயல்திறனை காங் கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இன்று மதிப்பீடு செய்கிறார். செயல் படாத அமைச்சர்களை நீக்கவும் முடிவெடுத்துள்ளதால் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த 2012ல் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்றது. அரசை கண்காணிக்கவும் ஆட்சிக்கு ஆலோசனை வழங்கவும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது .இதை கட்சி யின் மேலிட பொறுப்பாளர் திக் விஜய் சிங் கவனித்து வருகிறார்.

இன்று செயல்திறன் மதிப்பீடு

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர் களின் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல் திறனை திக்விஜய் சிங் இன்று மதிப்பீடு செய்கிறார். அப்போது கடந்த மக்களவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சிப் பணி தொடர்பான அவர் கேள்வி எழுப்பக்கூடும் என்று தெரிகிறது.

மேலும் கர்நாடகத்தில் சமீப காலமாக எழுந்துவரும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, நில ஒதுக்கீட்டு விவகாரம், வாரியத் தலைவர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக் கப்பட உள்ளன. இது தவிர அமைச் சர்களின் துறை ரீதியான பணிகள் குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது. இதன் அடிப்படை யில் முதல்வர் மற்றும் அமைச்சர் களின் செயல்திறனை மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இந்த அறிக்கை வரும் 15ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அளிக்கப் படும். இதையடுத்து செயல்படாத அமைச்சர்கள் நீக்கப்படுவார் கள் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிருப்தியாளர்கள் போர்க்கொடி

திக்விஜய் சிங் வருகையை யொட்டி கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஷ்வர், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க திட்ட மிட்டுள்ளனர்.

முதல்வரும் அமைச்சர்களும் தங்களுக்கு ஒத்துழைப்பு தருவ தில்லை, கட்சிப்பணி மற்றும் தொகு திப் பயணம் புறக்கணிப்பு, நலத் திட்டங்களில் மெத்தனம் போன்ற புகார்களை அளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கேட்கவும் உள்ளனர்.

கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த பரமேஷ்வருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மூத்த அமைச்சர்கள் சிலர் இந்தக் கோரிக்கையை எழுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர நலவாரியங்களில் ப‌தவி நியமனம், அமைச்சரவை விரி வாக்கம் உள்ளிட்ட விவகாரங் களையும் சிலர் எழுப்பவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்