‘இந்தியாவில் ஐ.எஸ்.ஸுக்கு ஆதரவில்லை’: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

By பிடிஐ

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் யாரும் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்த அமைப்பின் படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து வருகின் றனர்.

இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இந்தியாவில் தீவிரவாதத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியா வில் யாரும் ஆதரவு அளிக்க வில்லை’’ என்று தெரிவித்தார்.

இந்தியாவில் அல்-காய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அதன் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அறிவித்திருப்பது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இப்போதைக்கு இந்தியாவில் அல்-காய்தா செயல்படவில்லை, எனினும் இந்திய அரசு எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறது, உளவுத் துறையும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுகிறது. எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள் ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உறுதி செய்யப்படாதவை.

ஆப்கானிஸ்தான் நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்த நாட்டில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் வெளி யேறிய பிறகு ஏற்படும் சூழ்நி லையை கணித்து அதற்கேற்ப செயல்படுவோம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்