பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மலைப் பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டிக்கெட்களை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தினந்தோறும் 65 முதல் 75 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இவர்களில் 20 முதல் 25 ஆயிரம் பக்தர்கள் அலிபிரி மலை அடிவாரத்தில் இருந்து திரு மலைக்கு மலைவழிப்பாதை வழியாக வருபவர்களே. நேர்த் திக் கடனாக வரும் இந்த பக்தர் களுக்கு தேவஸ்தானம் ‘திவ்ய தரிசனம்’ எனும் பெயரில் இலவச டிக்கெட் வழங்கி வருகிறது.
இதன் மூலம் இவர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதங் களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் திவ்ய தரிசனம் மூலம் தரிசிக்கும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதனால் திருமலையில் சர்வ தரிசனம் (இலவச தரிசனம்), ரூ. 300 கட்டண சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களிடையே நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க தேவஸ்தானம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இனி திவ்ய தரிசன டிக்கெட்களை வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளது.
வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனை அடிப்படையில் திவ்ய தரிசன டிக்கெட்களை ரத்து செய்வதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு நேற்று திருமலையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: மலைவழிப்பாதை வழியாக பக்தர்கள் வழக்கம்போல் திருமலைக்கு வரலாம். ஆனால் அவர்களுக்கு திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட் டாது. சர்வ தரிசனம் மூலம் சுவாமியை இலவசமாக தரிசிக்க லாம். பக்தர்களிடையே எழும் ஆதரவு, எதிர்ப்பைப் பொறுத்து இத்திட்டத் தொடர்வதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago