எனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

By என்.மகேஷ் குமார்

ஆந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மே இறுதி யில் பதவியேற்றார். இதையடுத்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும் பத்தினருக்கான பாதுகாப்பை புதிய அரசு குறைத்தது. உண்டவல்லியில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற கட்டிடம் சட்டவிரோத கட்டிடம் என்று அறிவிக்கப்பட்டு இடித்து தள்ளப்பட்டது.

இதையடுத்து அவர் வசித்து வந்த குத்தகை வீடும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “மாநில அரசு வேண்டு மென்றே எனக்கு வழங்கப் பட்டிருந்த பாதுகாப்பை குறைத் துள்ளது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் வீடு, இடம் போன்ற தேவையற்ற பிரச்சினைகளையும் அரசு கையில் எடுத்துள்ளது. இதனால் எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஆந்திரா கொந்தளிக்கும். பிறகு யாராலும் மக்களை கட்டுப்படுத்த முடியாது” என்றார்.

முன்னதாக சிராலா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின ரால் தாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர் பத்மா என்பவரின் வீட்டுக்கு சந்திரபாபு சென்றார். தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், கட்சி சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

“கடந்த 40 நாட்களில் எனது கட்சியை சேர்ந்த 90 பேர் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்?” என்றும் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்