மதரஸாக்களில் ஜிகாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம்?- மத்திய அரசு கண்காணிப்பு

ஜிகாத்துக்கு ஆதரவாகப் பிரச் சாரம் நடப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தையடுத்து மதரஸாக் கள் சிலவற்றை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேற்குவங்க மாநிலம் பர்த்மானில் உள்ள மதரஸா ஒன்றில் வங்கதேசத்தவர்கள் சிலர் ஆசிரி யர்களாக உள்ளனர். அவர்கள், ஜமாத் உல் முஜாகிதீன் பங்களா தேஷ் என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள். மதரஸாக்களில் கல்வி கற்க வரும் மாணவர் களிடையே ஜிகாத்துக்கு (புனிதப் போர்) ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்த உளவுத்துறை யினர், இந்திய ஆசிரியர்கள் பணியாற்றும் மதரஸாக்களில் தீவிரவாதம் தொடர்பாகவோ, பிரிவினைவாதம் தொடர் பாகவோ எந்தவிதமான பிரச்சார மும் நடைபெறுவதில்லை. ஆனால், வங்கதேசம், பாகிஸ்தா னைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றும் மதரஸாக்களில் தீவிரவாதத்துக்கு ஆதரவான பிரச்சாரம் நடைபெறுகிறது என்று எச்சரித்திருந்தனர்.

இதையடுத்து வெளிநாடு களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் களாக உள்ள மதரஸாக்கள் குறித்த விவரங்களை சேகரிக் கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

குர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “வெளிநாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற் றும் மதரஸாக்களில் தீவிரவாதம் தொடர்பான பிரச்சாரம் மேற் கொள்ளப்படுவது குறித்து விசா ரணை நடத்தி வருகிறோம். சந்தேகத்துக்கிடமாக செயல் படும் மதரஸாக்கள் மீது கண்காணிப்பை அதிகரித் துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்