நவீனமாற்றங்களைத் தொடரும் ஆர்எஸ்எஸ்: ட்விட்டரில் இணைந்த அதன் தலைவர்கள்

By ஆர்.ஷபிமுன்னா

ஒரு காலம்வரை, பாரம்பரியம் மற்றும் பழமைவாதத்திற்கு பெயர் போன அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருந்தது. ஆனால், அதன் பிரிவுகளில் ஒன்றான பாஜக, நவீன மாற்றங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

 

அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் காலத்திற்கு ஏற்ற நவீனமாற்றங்கள் ஏற்படத் துவங்கி உள்ளது. இதன் தலைவர் மோஹன் பாக்வத் சமூகவலைதளத்தின் டிவிட்டர் பக்கத்தில் கணக்கு துவக்கி உள்ளார்.

 

இவருடன் அந்த அமைப்பின் பொதுச்செயலாளரான சுரேஷ் பைய்யா ஜோஷி மற்றும் இணைப் பொதுச் செயலாளர்களான சுரேஷ் சோனி, கிருஷ்ணகோபால், வி.பாகைய்யா, மற்ற சில பொறுப்புகளில் வகிக்கும் முக்கிய தலைவர்களான அருண் குமார் மற்றும் அனிரூத்தேஷ் பாண்டே ஆகியோரும் அக்கணக்கை துவக்கி உள்ளனர்.

 

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘எங்கள் அமைப்பின் மீதான அவதூறு கருத்துக்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்த கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.

 

எனினும், இதை எந்த அளவிற்கு அவர்கள் பயன்படுத்துவார்கள் எனக் கூற முடியாது. இதன்மூலம், எங்கள் அமைப்பும் நவீனமாற்றத்தை ஏற்கத் துவங்கி விட்டதாகக் கருதலாம்.’ எனத் தெரிவித்தனர்.

 

கடந்த 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் தன் சீருடையான காக்கி நிற

 

அரைகால் டிரவுசர், வெள்ளை நிறச்சட்டை மற்றும் துணியிலான கருப்பு நிறத் தொப்பி ஆகியவை இருந்தன.

 

இவற்றை, உடற்பயிற்சி எனும் பெயரில் நடத்தும் ‘ஷாகா’ எனும் கூட்டங்களில் அதன் தொண்டர்கள் அணிந்து வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் தனது அரைக்கால் டிரவுசரில் இருந்து முழுக்காலுக்கு மாறியது. இந்தவகையில் அதன் நவீனமாற்றங்கள் தொடர்கின்றன.

 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கம் ஏற்கனவே துவக்கப்பட்டு விட்டது. இதனை சுமார் 1.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதில், அந்த அமைப்பின் செய்திகுறிப்புகளும், அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன.

 

இதை புதிய கணக்கை துவக்கிய தலைவர்கள் மற்றும் பாஜகவினர் ட்விட்டரில் தொடருகின்றனர். எனவே, இதன் உதவியால், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இனி சமூகப்பிரச்சனைகளின் மீது உடனடியாக தங்கள் கருத்துக்களை பொதுமக்கள் முன் பதிவு செய்யத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்