கடந்த ஆட்சியில் தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் கடந்த ஆட்சியின் போது தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு துறை உயரதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஜெகன்மோகன் பேசும்போது, “ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் 1,513 விவசாயிகள், கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்துகொண்டதாக குற்றப்பதிவு அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் இதில் 391 விவசாயிகளுக்கு மட்டுமே முந்தைய அரசு நிதியுதவி அளித்துள்ளது. மற்றவர்களுக்கு நிதியுதவி மறுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களுடன் சென்று, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு இனி ஆதரவாக இருப்போம் என்பதை தெரிவித்து, அவர்களுக்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதாக கூறவேண்டும். இந்த நிதியுதவி திட்டத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தை தவிர வேறு யாரும் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்