நாட்டிலேயே முதன்முறை: நக்ஸல்களுக்கு எதிரான வேட்டையில் பெண்கள் சிறப்புப் படை

நாட்டிலேயே முதன்முறையாக வனப் பகுதிகளில் நக்ஸல்களுக்கு எதிரான வேட்டையில் சிஆர்பிஎப் பெண்கள் சிறப்புப் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வன்முறை மிகுந்த பகுதியில் சண்டையிடுவதற்காக பெண்கள் படையை நேரடியாக ஈடுபடுத்திய ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

தலா 35 பெண்களைக் கொண்ட 2 படை அமைக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் ஒன்று நக்ஸல் ஆதிக்கம் அதிக அளவில் உள்ள சத்தீஸ்கரின் பஸ்தார் வனப் பகுதியிலும் மற்றொரு படை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள வனப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக இதுபோன்ற சவா லான போர்முனைகளில் ராணுவமோ, துணை ராணுவமோ பெண் வீரர்களை ஈடுபடுத்துவ தில்லை. ஆனால் இடதுசாரி தீவிர வாதத்தை ஒடுக்குவதற்காக இப் போது மிகவும் ஆபத்தான மற்றும் உணர்வுப்பூர்வமான பகுதி களில் பெண் வீரர்கள் நாட்டிலேயே முதன்முறையாக ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதற்கு மத்திய உள் துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது. எனினும், இதுகுறித்து அவ்வப்போது மறு ஆய்வு செய்யப்படும்.

பெண்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதன் மூலம், உள்ளூர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நக்ஸல்கள் நடமாட்டம் பற்றிய தகவல் களை சேகரிக்க முடியும் என சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நக்ஸல் வேட்டையில் ஈடுபடுவோர் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதைத் தடுக்கவும் முடியும் என கருதப்படுகிறது.

மேற்குவங்கத்தில் இதுபோன்ற அணுகுமுறையை பயன்படுத்தியதன் மூலம், நக்ஸல் நடமாட்டம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்